'அவன் ஏன் தோப்புக்குள்ள வந்தான்..' மது போதையில் பயங்கர தகராறு... - கொலையில் முடிந்த அடிதடி

x

கொங்குவார்பட்டியை சேர்ந்தவர் வினோத். இவர், தனக்கு சொந்தமான தென்னந்தோப்பில், தனது உறவினரான ஜெகதீஸ்வரனுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்துள்ளார்.

அப்போது, ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மது போதையில, வினோத்தின் தோப்பிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் வினோத் அவர்களை திட்டிய நிலையில், இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர், அங்கிருந்து சென்ற இளைஞர்கள் இருவரும், தனது உறவினர்கள் சிலரை அழைத்து வந்து வினோத் மற்றும் ஜெகதீஸ்வரனை தாக்கி உள்ளனர்.

இதில், பலத்த காயம் அடைந்த ஜெகதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்