'தளபதி ' DKS- ஐ காங்கிரஸ் கைவிட்டது ஏன்? கழுகு போல் காத்திருக்கும் பாஜக... அதிரவைக்கும் 7 காரணங்கள்..!

x

கர்நாடகா முதல்வர் அரியணைக்கான ரேசில் சித்தராமையா முந்தியதற்கான காரணம் குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு

கர்நாடகாவை காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதல்வர் யார்...? என்பதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா-காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவியது.. போட்டியில் வென்று முதல்வராக மகுடம் சூட்டியுள்ளார் சித்தராமையா...

சித்தராமையாவை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை மாநிலம் முழுவதும் ஒலிக்க, தேர்தலையொட்டிய யார் முதல்வர் என்ற கருத்து கணிப்புகளிலும் முதலிடம் பிடித்தார் சித்தராமையா.

மறுபுறம் டி.கே. சிவகுமாரை முதல்வராக்க வேண்டும் என்று ஒக்கலிக்கர்கள் மத்தியில் அதிகம் எதிரொலித்தது.

எம்.எல்.ஏ.க்கள் செல்வாக்கை பொருத்தவரை, சித்தராமையாவே அதிக செல்வாக்கு கொண்டிருந்தார்.

டி.கே. சிவகுமாருக்கு எம்.எல்.ஏ.க்கள் செல்வாக்கு என்பது ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது

மாநிலத்தில் 2018-ல் காங்கிரஸ் ஆட்சியை 5 ஆண்டுகள் நிறைவு செய்த சித்தராமையா, ஆட்சி நிர்வாகத்தில் திறமை கொண்டவர். அவருடன் ஒப்பிடும் போது அரசு நிர்வாகத்தில் டி.கே. சிவகுமாருக்கு அனுபவம் குறைவே...

குருபா சமூகத்தை சேர்ந்த சித்தராமையா மாநிலத்தில் பட்டியல் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரது அமைப்பாக விளங்கும் அஹிந்தாவில் செல்வாக்கு கொண்டவர்.

டி.கே. சிவகுமாரை பொறுத்தவரையில் மைசூரு கர்நாடகாவில் ஒக்கலிக்கர்கள் மத்தியில் செல்வாக்கு கொண்டவராக இருக்கிறார். மற்ற சமூகத்தில் அதே அளவு அவர் செல்வாக்கை கொண்டிருக்கவில்லை.

அரசாங்க பிரச்சினைகளில் பிரதமர் மோடி, பாஜக, மதசார்பற்ற ஜனதா தளத்தை எதிர்கொள்ள வலுவான திறமையை கொண்டவர் சித்தராமையா. ஆனால் அவர்களை எல்லாம் அரசியல் களத்தில் மட்டுமே சந்தித்திருக்கிறார் டி.கே. சிவகுமார்...

ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக இருக்கும் சித்தராமையா வெளிப்படையாக அவரது ஆதரவையும் கொண்டவராக பார்க்கப்பட்டார். அப்படி பார்த்தால், டிகே சிவகுமாரும் காந்தி குடும்பத்துடன் நெருக்கம் கொண்டவராகத்தான் இருந்தார்.

கட்சியில் கட்டமைப்பு ரீதியாக வலுவானவராக இல்லை என்றாலும் மாநில அரசின் நிர்வாகம் வாயிலாக 2024 தேர்தலில் காங்கிரசை வலுப்படுத்த வல்லவராகவும் இருக்கிறார் சித்தராமையா.

ஆனால் அதனை வெற்றியாக்க உள்ளூர் அரசியலை அறிந்து களத்தில் ஆடு புலி ஆட்டம் ஆடக்கூடிய டி.கே.சிவகுமார் துணை காங்கிரசுக்கு மிக அவசியம்...

இது சாகதமாக பார்க்கப்பட்டாலும் 75 வயதாகிவிட்ட சித்தராமையாவுக்கு எதிராக பெரிய வழக்குகள் எதுவும் இல்லை.. ஆனால் டி.கே.எஸ். சிவகுமாருக்கு எதிராக இருக்கும் வருமான வரித்துறை, சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு வழக்குகளும் சித்தராமையா கையை வலுப்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்