"ரூ.29 -க்கு ஏன் ரூ.39 கேக்குறீங்க"... எக்ஸ்ட்ரா வெறும் 10 ரூபாய் கொடுக்காத கஸ்டமருக்கு கிடைத்த 30 ஆயிரம் ரூபாய்

x

சிவகங்கை மாவட்டம் அழகநாச்சிப்புரம் பகுதியை சேர்ந்த விவசாயி துரை பாண்டி, கடந்த ஏழு மாதங்களுக்கு முன், சென்னைக்கு சென்றுள்ளார் தி.நகர் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் ஹேர் டை ஒன்று வாங்கி உள்ளார். அந்த ஹேர் டை யின் விலை 29 என அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அந்த தனியார் நிறுவனம் 39 ரூபாய் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏன் அதிக விலை என்று விவசாயி அங்கு பணிபுரிந்த ஊழியரிடம் கேட்டபோது, அவரை அவமதித்து பேசியுள்ளார். பின்பு மன உளைச்சலில்சொந்த ஊருக்கு வந்த அவர், மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தை நாடியுள்ளார். அங்கு வழக்கு தொடர்ந்து நிலையில், அதை விசாரித்த மாவட்ட நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன், ஒரு ஹேர் டைக்கு பத்து ரூபாய் கூடுதல் வசூலித்த தனியார் நிறுவனத்திற்கு 25 ஆயிரம் அபதாரம் விதித்தார். வழக்கு செலவு தொகையாக 5 ஆயிரம் மற்றும் அந்த விவசாயி இடம் பெற்ற கூடுதல் தொகையான பத்து ரூபாயையும் சேர்த்து 30 ஆயிரத்து பத்து ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார். இரண்டு மாதத்துக்குள் அந்த தொகையை வழங்காத பட்சத்தில் 9 சதவீத கூடுதல் வட்டி தொகையாக சேர்த்து வழங்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்