அழுகிய நிலையில் கிடந்த பெண் சிசு... கிணற்றில் வீசிச் சென்றது யார் ? - போலீசார் அதிரடி

x

நாமக்கல் அருகே, பிறந்து மூன்று நாட்களே ஆன பெண் சிசு, அழுகிய நிலையில் கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. எம்.மேட்டுப்பட்டி பகுதியில், சாலையோரம் உள்ள கிணற்றில், குழந்தையின் சடலம் மிதப்பதாக எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு விசாரணை செய்ததில், பிறந்து மூன்று நாட்களே ஆன பெண் சிசு என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசுவின் சடலத்தை கிணற்றில் வீசிச் சென்றது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்