திமுகவில் இணைய காரணம் யார்? அமைச்சர் துரைமுருகனின் சுவாரசிய பதில்

x

திமுகவில் தான் இணைய காரணமாக இருந்தவர் ஓவிய ஆசிரியர் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கழிஞ்சூர் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு மாளிகை திறப்பு விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு, நூற்றாண்டு மாளிகையை திறந்து வைத்தார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தான் திமுகவில் இணைய காரணமாக இருந்த‌து கழிஞ்சூர் என்றார். நெற்றியில் திருநீறு பட்டையும் குங்கும‌மும் வைத்திருந்த‌தால் என்ன பலன் என்று ஓவிய ஆசிரியர் கேட்டதால், அவற்றை அகற்றிவிட்டு, திமுகவில் இணைந்த‌தாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்