புதிய குடியரசு துணைத் தலைவர் யார்? - பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே இன்று தேர்தல்

புதிய குடியரசு துணைத் தலைவர் யார்? - பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே இன்று தேர்தல்
x

நாட்டின் புதிய குடியரசு துணை தலைவரை தேர்ந்தேடுப்பதற்கான தேர்தல் இன்று பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெறவுள்ளது.குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், புதிய குடியரசு துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கரும், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மார்க்ரெட் ஆல்வாவும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரை தேர்வு செய்ய நாடாளுமன்ற இரு அவைகளைச் சேர்ந்த 790 பேர் வாக்களிக்க உள்ளனர்.

மாநிலங்களவையில் நியமன எம்.பி.க்கள் 12 பேர் உள்பட 245 பேரும், மக்களவையில் நியமன உறுப்பினர்கள் 2 பேர் உள்பட 545 பேரும் குடியரசு துணை தலைவரை தேர்வு செய்ய உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்குகள் எண்ணப்பட்டு, இன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற 395 வாக்குகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்