யார் முதல்வர் வேட்பாளர்?.. சித்தராமையா vs டி.கே.சிவகுமார்.. மீண்டும் வெடிக்கிறதா மோதல்?

x

யார் முதல்வர் வேட்பாளர் ? என்பதில் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது ஊரறிந்த செய்தி. இந்நிலையில், இருவரையும் சமாதானம் செய்து, ஒற்றுமையாக பயணிக்க காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், தன்னுடன் சேர்ந்து முதல்வர் வேட்பாளர் ரேஸில் டி.கே.சிவக்குமாரும் இருப்பதாக தெரிவித்துள்ள சித்தராமையா, இதனால் தனக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார். தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரஸுக்கு சாதகமாக வெளியாகி வரும் நிலையில், ஒருவேளை காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்வரை தேர்ந்தெடுப்பதில் உட்கட்சி பூசல் வெடிக்க கூடும் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்