கர்நாடக முதலமைச்சர் பதவி யாருக்கு? - பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

x

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. இந்நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் எதிர்பா​​ர்ப்பு நிலவுகிறது. முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் சட்டமன்றக்குழு இன்று மாலை கூடும் நிலையில், பெங்களூருவில் உள்ள சித்தராமையா இல்லம் முன்பு திரண்ட அவரது ஆதரவாளர்கள், அடுத்த முதலமைச்சர் சித்தராமையா தான் வாழ்த்தி சுவரொட்டி ஒட்டியுள்ளனர். இதேபோல், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரை முதலமைச்சராக அறிவிக்கக்கோரி, அவரது இல்லம் முன்பாக, ஆதரவாளர்கள் சுவரொட்டி ஒட்டி கோஷம் எழுப்பினர். இதனிடையே, சித்தராமையா இல்லம் முன்பு குவிந்து வரும் ஆதரவாளர்கள், பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்