சித்தராமையாவின் தலைமை ஊடக ஆலோசகர் யார்..? - வெளியான பரபரப்பு தகவல்

x

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் தலைமை ஊடக ஆலோசகராக, சுனில் கனகொலு நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் வியூக வகுப்பாளராகவும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வார் ரூமின் தலைமை நிர்வாகியாகவும் செயல்பட்டவர் சுனில் கனகொலு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சித்தராமையாவின் தலைமை ஊடக ஆலோசராக, சுனில் கனகொலு நியமிக்கப்படுவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வரை வெளியாகவில்லை...


Next Story

மேலும் செய்திகள்