"யார் காரணம்.. என்ன நடந்தது?" - சீற்றம் கொண்ட ராமதாஸ்

x

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்க முடியாததற்கு காரணம் யார்? என கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டில்லி, கோபால் மற்றும் குவாலியரில் கடந்த 5-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார். இதற்கு முழு காரணம் பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியம் என்று டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

503 மாணவர்களை அனுப்பி வைக்க கோரும் கடித‌ங்கள் கடந்த மே11ஆம் தேதி முதலே அனுப்ப‌ப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத‌தால் மாணவர்கள் பங்கேற்க முடியவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளாதது தமிழகத்திற்கு தலைகுனிவு என்றும், அண்மைக்காலங்களில் தமிழ்நாடு கலந்து கொள்ளாதது இதுவே முதல்முறை என்றும் வேதனை தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி, யார் தவறு செய்திருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்