கூட்ட நெரிசலுக்கு யார் காரணம்? ... சந்திரபாபு நாயுடு பகீர் புகார்

x

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில், பிரசார ரதம், மைக் ஆகியவற்றை பயன்படுத்தவும்,பொதுக்கூட்டம் நடத்தவும் போலிஸ் நிர்வாகம் தடை விதித்தது.

இந்த நிலையில் 72 வது வயதான சந்திரபாபு நாயுடு பாத யாத்திரையாக சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறார்.

அப்போது செய்தியாளர்களுடன் பேசிய சந்திரபாபு நாயுடு, தமது ஆட்சி காலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி, அவரது தங்கை சர்மிளா, தாய் விஜயம்மா ஆகியோர் பாத யாத்திரை மேற்கொண்டதாகவும் அதற்கு ஜனநாயக ரீதியில் ஒத்துழைப்பு வழங்கியதாக குறிப்பிட்டார்.

70 ஆண்டுகளாக ஆந்திராவில் அரசியல் ரீதியான பாதயாத்திரை, வாகன பேரணி நடைபெற்று வருவதாகவும் ஆனால் யாரும் அதனை தடுத்தது இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

போலீசாரின் இது போன்ற நடவடிக்கைகள் காரணமாகவே கட்சி நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக புகார் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்