சைலேந்திரபாபு இடத்திற்கு வர போவது யார்?

x

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நாளை (22.6.23) ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு , உள்துறைச் செயலாளர் அமுதா மற்றும் தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர். புதிய டிஜிபிக்கான பரிந்துரை பட்டியல் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டத்தின் இறுதியில், மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இறுதி செய்து தமிழ்நாடு அரசிடம் பட்டியலை ஒப்படைக்கும். இதிலிருந்து ஒருவரை தமிழ்நாடு அரசு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக காவல் துறையில் தற்போது 12 பேர் டிஜிபிக்களாக உள்ளனர்.தமிழக கேடர் அதிகாரியான சஞ்சய் அரோரா, அயல்பணியில் டெல்லி காவல் ஆணையராக உள்ளார். சென்னை காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவால், காவலர் வீட்டு வசதி வாரிய டி.ஜி.பி ஏ.கே.விஸ்வநாதன், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குனர் சீமா அகர்வால், டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி, காவல்துறை பயிற்சி அகாடமி இயக்குனராக உள்ள டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், மத்திய அயல்பணியில் உள்ள ராஜீவ் குமார், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் அபய்குமார் சிங், டிஜிபி வன்னிப் பெருமாள் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்