2022 ஆண்டில் பாக்ஸ் ஆஃபிஸ் - யில் ஹிட் கொடுத்த டாப் 10 நடிகர்கள் யார்?

x

நடப்பு ஆண்டில் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுத்த, சிறந்த நடிகர்களின் டாப் 10 பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்த பட்டியலில், ராக்கி பாய் ரசிகர்களின் பேராதரவுடன் 'கே.ஜி.எஃப் 2' படத்திற்காக யாஷ் முதலிடத்தை பதிய வைத்துள்ளார்.

இவரது 'கே.ஜி.எஃப் 2' திரைப்படம் உலகம் முழுவதும், ஆயிரத்து 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக் குவித்துள்ளது.

அடுத்ததாக ராஜ மவுலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' உலக அளவில், ஆயிரத்து 130 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்ததால், இப்படத்தில் நடித்த ராம் சரண் 2ம் இடம் பிடித்த நிலையில், ஜூனியர் என்டிஆர் 3வது இடத்தை தக்க வைத்துள்ளார்.

'பொன்னியின் செல்வன்' படத்தில் ஆதித்த கரிகாலனாக தோன்றி, மக்களின் மனம் கவர்ந்த 'விக்ரம்' இந்த பட்டியலில் 4வது இடத்தை பிடித்த நிலையில், 'விக்ரம்' படத்தில் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்திய 'கமல்' 5வது இடத்தை பிடித்தார்.

மேலும், இந்த பட்டியலில் ரன்பீர் கபூர், கார்த்திக் ஆர்யன், அனுபம் கெர், அஜய் தேவ்கன், ரிஷ்ப் ஷெட்டி ஆகியோரும் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்