சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை... ஆறாக மாறிய சாலை

x

சென்னையில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் பெய்த மிதமான மழை

வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இரவு நேரத்தில் சென்னையின் தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, நந்தனம், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோட்டூர்புரம், கிண்டி, சைதாப்பேட்டை, அசோக்நகர், மத்திய கைலாஷ், அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் காற்று, மற்றும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்