"அன்பு மகன் சென்ற இடத்திற்கே நாமும் போவோம்".. முடிவெடுத்த தாய், தாய்.. சோகத்தில் முடிந்த வாழ்க்கை

x

திருவள்ளூரில் மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டாபிராம் அடுத்த கர்ணாகரசேரியைச் சேர்ந்த தனசேகர்-பூங்கொடி விவசாய தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர்.

மகன் ஹரிஷ் 1 ஆண்டுக்கு முன்பு காதல் விவகாரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தனசேகர்-பூங்கொடி இருவரும் துக்கம் தாளாமல் அக்கம்பக்கத்தினரிடம் தினமும் அழுது புலம்பி வந்துள்ளனர்...

இன்னும் ஒரு வாரத்தில் ஹரிஷின் நினைவு நாள் வரும் நிலையில், இருவரும் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளனர்.

நேற்று இரவு தனசேகரும் பூங்கொடியும் பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், காலை வாயில் நுரை தள்ளி மயங்கிக் கிடந்துள்ளனர்.

உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து உறவினர்கள் அத்தம்பதியின் உடலை போலீசாருக்குத் தகவல் தெரிவிக்காமல் புதைக்க முயன்ற நிலையில், அக்கம்பக்கதினர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உறவினர்களிடம் சமாதானம் பேசி உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்