அஞ்சலியின் மூளை எங்கே..? நாட்டை உலுக்கி சம்பவத்தில் பகீர் திருப்பம் - யார் இந்த நிதி? திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள்

x

டெல்லியில் காருக்கு அடியில் இழுத்துச் செல்லப்பட்ட அஞ்சலி உயிரிழந்த சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...


புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்ற இளம்பெண் அஞ்சலி 12 கி.மீ. தூரம் காரில் இழுத்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் தலைநகரை உலுக்கியிருக்கிறது.

இந்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்ட சூழலில் அவர்களிடம் விசாரணையும் நடந்து வருகிறது.

இதனிடையே இந்த வழக்கை டெல்லி போலீசார் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் பல்வேறு தகவல்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகளும் வெளியான சூழலில் காரில் இழுத்துச் சென்ற வேகத்தில் அஞ்சலியின் மூளை கிடைக்கவில்லை என்பதே அவரது குடும்பத்தினரை பதற வைத்திருக்கிறது...

அஞ்சலியுடன் வாகனத்தில் நிதி என்ற பெண்ணும் உடன் சென்றதை சிசிடிவி காட்சிகள் உறுதி செய்தன.

இதன் பேரில் நிதியை போலீசார் விசாரித்த போது அவர் அளித்த தகவல்கள் பலரையும் அதிர வைத்தது.

காரணம் நடந்த சம்பவத்தை விவரித்த நிதி, அஞ்சலி மதுபோதையில் இருந்ததாக கூறியிருந்தார்...

இதனால் கொதித்துப்போன அஞ்சலி தரப்பு, நிதி சொல்வதில் உண்மையில்லை என்றனர்.

இதை பிரேத பரிசோதனை அறிக்கையும் உறுதி செய்திருக்கிறது...

அஞ்சலிக்கு மது குடிக்கும் பழக்கமே இல்லை என உறுதியாக கூறிய அவர்கள், இதுபோன்ற அவதூறை நிதி ஏன் பரப்புகிறார்? என கேள்வி எழுப்பினர்.

அதேபோல் டெல்லியில் உள்ள பெண்கள் அமைப்பினர் பலரும் நிதியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் சம்பவம் குறித்து முதலில் அவர் போலீசில் புகாரளிக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நிதி என்பவர் குறித்து அஞ்சலி இதுவரை தங்களிடம் எதுவுமே சொன்னதில்லை என்றும், மகளின் மரணத்தில் நிதிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளனர்.

இதனிடையே இந்த சம்பவத்தில் கைதான 5 பேரை தவிர, மேலும் 2 பேருக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறியிருக்கும் டெல்லி போலீசார், இதற்காக 18 குழுக்களை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.

விபத்தின் போது உடன் இருந்ததாக சொல்லப்படும் நிதி குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் யார்? அவருக்கும் அஞ்சலிக்கும் உண்மையில் நட்பு இருந்ததா? என்ற கேள்விகளுக்கு நிதி வாய் திறந்தால் பதில் கிடைக்கும். கூடவே அஞ்சலியின் மரணத்தின் பின்னால் உள்ள மர்மமும் விலகும்...


Next Story

மேலும் செய்திகள்