"எம்.எல்.ஏ.க்களை வாங்க பணம் எங்கிருந்து வருகிறது?" - "ஆதாரம் இருந்தால் கோர்ட்டுக்கு செல்லுங்கள்.." - ராகுல் Vs அமித் ஷா

x

இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த அரசு பாஜக அரசுதான் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் கர்நாடகாவில் தலைவர்கள் வருகையால் பிரசார களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பெல்காவி மாவட்டம் ராம்துர்க் பகுதியில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்த ராகுல் காந்தி, நாட்டிலேயே ஊழல் நிறைந்த அரசு பாஜக அரசுதான் என்றவர், பாஜக ஆட்சியில்தான் 40 % கமிஷன் வாங்கப்படுகிறது என குற்றம் சாட்டினார். இப்படி கமிஷனாக வாங்கிய பணத்தை கொண்டுதான் முந்தைய ஆட்சியில் எம்.எல்.ஏ.க்களை திருடியிருக்கிறார்கள் என குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, கர்நாடகா, கோவா, மத்திய பிரதேசத்தில் எம்.எல்.ஏ.க்களை வாங்க எங்கிருந்து பணம் கிடைத்தது என்பதை பிரதமர் மோடி சொல்ல வேண்டும் எனவும் கேள்வியை எழுப்பினார். மறுபுறம் மத்திய உள்துறை அமைச்சர் அமிஷ்தா, ஹாசன் மாவட்டத்தில் பாஜகவுக்கு ஆதரவு திரட்டினார். அங்கு பிரமாண்ட பேரணியையும் நடத்தினார்


Next Story

மேலும் செய்திகள்