"முதலமைச்சர் ஸ்டாலின் கடந்து வந்த பாதையை பார்க்கும் போது.." - வியந்து பேசிய செந்தில் - ராஜலட்சுமி

x

"எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை" புகைப்பட கண்காட்சி பெரு நகரங்கள் மட்டும் இன்றி கிராமப்புறங்களிலும் நடத்த வேண்டும் என, நாட்டுப்புற கலைஞர்கள் செந்தில் - ராஜலட்சுமி ஆகியோர் கேட்டுக் கொண்டனர். "எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை" புகைப்பட கண்காட்சி, கடந்த 7ஆம் தேதி முதல் கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை நாட்டுப்புற இசை கலைஞர்கள் செந்தில் - ராஜலட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் - ராஜலட்சுமி, முதலமைச்சர் ஸ்டாலின் கடந்து வந்த பாதையை பார்க்கும் போது, வியப்பாக இருக்கிறது என்றனர்.


Next Story

மேலும் செய்திகள்