"ஆஸ்திரேலிய அணி பாக்., வந்தபோது ... எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தன" - ரமீஸ் ராஜா பரபரப்பு தகவல்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்தபோது தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக ரமீஸ் ராஜா கூறி உள்ளார். ரமீஸ் ராஜாவை தலைவர் பதவியில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியது. கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்தபோது ரமீஸ் ராஜா குண்டு துளைக்காத கார்-ஐ பயன்படுத்தி வந்தார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் தற்போது கேட்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாகவும், அதன்பிறகே அந்த காரை பயன்படுத்த தொடங்கியதாகவும் கூறி உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com