விலையை கேட்டாலே கண்ணீர் வருது... அதிரடியாக உயர்ந்த சின்ன வெங்காயம் விலை

x

விலையை கேட்டாலே கண்ணீர் வருது... அதிரடியாக உயர்ந்த சின்ன வெங்காயம் விலை

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில், ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு 500க்கும் மேற்பட்ட சின்ன வெங்காய மூட்டைகளை வியாபாரிகள், விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ சின்ன வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காய விலை உயர்ந்தாலும், விளை நிலங்களில் பயிரிட விவசாயிகள் ஏராளமானோர் வாங்கிச் சென்றனர்.



Next Story

மேலும் செய்திகள்