"ஆத்தி போலீஸ்..! ஓடுரா, ஓடுரா..." போலீசை கண்டதும் பணத்தை போட்டு ஓடிய காங். பிரமுகர்... வைரல் வீடியோ

x

குஜராத்தின் சூரத் நகரில் காங்கிரஸ் பிரமுகரின் வாகனத்திலிருந்து 75 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தேர்தலில் பணப்புழக்கம் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு மாநில காவல் துறை தங்களின் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,சூரத்தின் மஹிதார்புரா பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் காவல்துறையினர் வானங்களை நிறுத்தி, வழக்கமான சோதனைகயில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அங்கு நிற்பனை கண்ட காங்கிரஸ் செயலாளர் சந்தீப் , பணத்தை காரிலேயே விட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காரில் இருந்து மற்ற இருவரை கைது செய்ய போலீசார் அவர்களிடம் இருந்து 74 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்