"என் பிள்ளைங்க அப்பா எங்கன்னு கேட்டா நான் என்ன செய்வன் " - கதறி அழுத மனைவி

x

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 14 காரைக்கால் மீனவர்களை மீட்டுத் தரக் கோரி மீனவ கிராம பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கோட்டுச்சேரி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த 14 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.

நெடுந்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 14 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

காரைக்கால் மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ள நிலையில், விசைப்படகையும், மீனவர்களையும் மீட்டுத் தரக்கோரி மீனவ கிராம பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்