ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் என்ன? - எய்ம்ஸ் மருத்துவக்குழு பரபரப்பு தகவல்

x

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தவிதமாக தவறுகளும் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவ குழு தனது அறிக்கையை, ஆறுமுகசாமி ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபடுவதற்கு முன்பாக ஜெயலலிதாவுக்கு நீரழிவு, உயர் இரத்த அழுத்தம், தைராய்டு, சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்ததாகவும், 2016-ம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இன்சுலின் உள்பட நோய் தன்மைக்கு ஏற்ப மருந்துகள்

அளித்ததாகவும், தற்காலிகமாக பேஸ்மேக்கர் கருவியும் பொருத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து லண்டன் மருத்துவர் ரிச்சட் பிலே உள்பட அப்பல்லோ சிறப்பு மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவ குழுவும் சிசிக்சை அளித்தாகவும், டிசம்பர் 3 ம் தேதி ஜெயலலிதா உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், மறுநாள் மூச்சுவிடுவதற்கு சிரமம் ஏற்பட்டதாகவும்,

இதை தொடர்ந்து இதயம் செயலிழந்தால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு 24 மணி நேரம் கண்காணித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.டிசம்பர் 5 ம் தேதி மூளை மற்றும் இதயம் செயலிழந்ததை உறுதி செய்து, அன்று இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்