யூடியூப்ர் கார்த்திக் பிள்ளை மீது ஸ்ரீமதி தாய் என்ன புகார் செய்தார்..?

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மாணவியின் தாய் செல்வி, கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், மகளின் மரணம் தொடர்பாக, தன் மீதும், தனது குடும்பத்தார் மீதும் தனியார் யூடியூப் சேனல் நடத்தி வரும் கார்த்திக் பிள்ளை என்பவர், அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவதூறு வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வி, புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்ததாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்