IIT வளாகத்திலே மாணவர்கள் செய்யும் பகீர் காரியம் - சென்னை IIT இயக்குனர் ஷாக் தகவல்

x

பள்ளி அளவிலேயே மாணவர்கள் மத்தியில் போதை பழக்கம் இருக்கிறது என்றும், ஐஐடி வளாகத்திற்குள் மாணவர்களிடையே கஞ்சா பழக்கம் இருப்பதாகவும் , ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி இயக்குநர் காம கோடி தலைமையில் , மன ஆரோக்கியம் மற்றும் மன அழுத்த மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை ஐஐடியில் மாணவர்களுக்கு பாகுபாடு காரணமாக மன அழுத்தம் ஏற்படுவதில்லை எனவும் ஆசிரியர்கள் அளவிலும் சாதி ரீதியான பாகுப்பாடு காட்டப்படுவதில்லை என்றும் தெரிவித்தார். பள்ளி அளவிலேயே மாணவர்கள் மத்தியில் போதை பழக்கம் இருக்கிறது என்றும், ஐஐடி வளாகத்திற்குள் மாணவர்களிடையே கஞ்சா பழக்கம் இருப்பதாகவும் , ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். மேலும், ஆராய்ச்சி மாணவர் தற்கொலை குறித்து விசாரணை செய்து அறிக்கை அளிக்க ஒய்வுப்பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஐஐடி இயக்குநர் காம கோடி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்