தேவர் ஜெயந்தியில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்

x

இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்துப்பதிவு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குவதாகவும், சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு முதலியவை உட்பட நம் தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்