அரசு திட்டங்கள், அறிவிப்புகளின் நிலை என்ன? - முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

அரசு திட்டங்கள், அறிவிப்புகளின் நிலை என்ன? - முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு
x

அரசின் திட்டங்கள், சட்டப்பேரவை அறிவிப்புகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்றும் நாளையும், அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். சட்டப் பேரவை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், காலை 10 மணி முதல் ஒன்றரை மணி வரை ஆய்வுக் கூட்டம் நடக்கிறது. இதில், அரசு அறிவித்த திட்டங்களின் நிலவரம், சட்டப் பேரவை அறிவிப்புகள் ஆகியவற்றின் நிலை குறித்து முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார். அமலாக்கத்துறை மூலம் நடத்தப்படும் ஆய்வுக் கூட்டத்தில், நகராட்சி, நீர்வளம், நெடுஞ்சாலை, பொதுப்பணி, தொழில், மின்சாரம் உள்ளிட்ட துறை செயலாளர்களுடன் இன்று கூட்டம் நடைபெறுகிறது. கூட்டுறவு மற்றும் உணவு, கல்வி, ஊரக வளர்ச்சி, சமூக நலம் உள்ளிட்ட துறை‌ செயலர்களுடன் நாளை ஆய்வு செய்கிறார். அனைத்து துறை செயலர்களும், துறை சார்ந்த திட்டங்களின் நிலை குறித்து வீடியோ தொகுப்பு மூலம் விளக்க உள்ளனர். பல்வேறு கேள்விகளை முதல்வர் எழுப்புவார் என்பதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.What is the status of government programs and announcements? - Chief Minister MK Stalin's inspection today


Next Story

மேலும் செய்திகள்