மோடி மௌனத்தை கலைக்க என்ன காரணம்..? "கொடூரமான வீடியோவா? உச்சநீதிமன்ற விசாரணையா? எது காரணம்?"

x

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென,

முன்னாள் மத்திய நிதிமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி, மணிப்பூர் விவகாரம் குறித்து தனது மௌனத்தை கலைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் பயணம் செய்தபோது மணிப்பூர் மக்கள் குறித்து பேசாத நிலையில், திடீரென மணிப்பூர் குறித்த ஞாபகம் வந்தது ஆச்சரியமாக உள்ளதாக குறிப்பிட்டார். மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு வரும் வெளியில் சொல்ல முடியாத குற்றம் தொடர்பான கொடூரமான வீடியோவா? அல்லது உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரிக்க தொடங்கி இருப்பதா? எது காரணம்? என கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி, முதல் வேலையாக பிரேன் சிங் ஆட்சியை கலைத்துவிட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்