குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருப்பதன் பின்னணி என்ன? | TNPSC Exam | Group 2

x

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5500 அலுவலர் நிலையில் ஆன பணியிடங்களை நிரப்ப , கடந்த மே மாதம் 21 ஆம் தேதி போட்டி தேர்வு நடத்தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இந்த தேர்வில் ஒன்பது லட்சத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் பங்கேற்றனர் . தேர்வு முடிந்து 6 மாதங்கள் முடிய உள்ள நிலையில், இது வரை முதல் கட்ட தேர்வு முடிவுகள் வெளியாகாமல் உள்ளது. விடைத்தாள்கள் தண்ணீரில் நனைந்து விட்டதால் , கணினி வழியாக மதிப்பீடு செய்ய இயலவில்லை என்றும், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் இயந்திரங்கள் பழுது ஏற்பட்டிருப்பதால் உடனடியாக அந்தப் பணிகள் முடியவில்லை என்றும், பல காரணங்கள் கூறப்படுகிறது. தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்