வானிலை ஆய்வு மையம் சொன்னது போலவே டெல்லியில் நடந்தது

x

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இரவு 9 மணியளவில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதேபோல், ஹரியானா மாநிலம் அம்பாலாவிலும் பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. வெயில் குறைந்து மழை பெய்யும் என கூறிய இந்திய வானிலை ஆய்வு மையம், இரண்டு நாட்களுக்கு முன் கூறி இருந்த நிலையில், வடமாநிலங்களுக்கு ஆரஞ்சு ஆலர்ட் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்