இங்கிலாந்து மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில் நடைபெறுபவை என்னென்ன?

x
  • இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் மறைந்த நிலையில், 3ம் சார்லஸின் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா, வரும் மே மாதம் 6ஆம் தேதி நடைபெறுகிறது.
  • இந்நிலையில் முடிசூட்டு விழா நடைபெறும் விதம் குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • அதன்படி மன்னர் 3ம் சார்லஸ் மற்றும் ராணி கமீலா தங்கமுலாம் பூசப்பட்ட குதிரை வண்டியில் வெஸ்ட்மினிஸ்டர் அபே தேவாலயத்திற்கு செல்வர். 700 ஆண்டுகள் பழமையான சிம்மாசனத்தில் செங்கோல் ஏந்தி அமரும் 3ம் சார்லஸுக்கு, பாரம்பரிய முறைப்படி கிரீடம் சூட்டப்படும். தொடர்ந்து பக்கிங்ஹாம் அரண்மனையில் நாட்டு மக்களிடம், புதிய மன்னரான சார்லஸ் உரையாற்றுவார்.
  • அதே தினத்தில் சார்லஸின் மனைவி கமீலாவும் இங்கிலாந்து ராணியாக அறிவிக்கப்படுவார். மன்னரின் முடிசூட்டு விழாவில் உலகம் முழுவதும் இருந்து 2 ஆயிரம் பிரபலங்களும், இங்கிலாந்தை சேர்ந்த முக்கிய நிறுவனங்களின் 850 பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்