"சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்வு நல்லதல்ல" - திருநாவுக்கரசர் | Congress

x

ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில், சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்வு நல்லதல்ல என்று, காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இந்திய தொல்லியல் துறை சார்பில் தொல்லியல் வார விழா புதுக்கோட்டை மாவட்டம் குன்னாண்டார் கோவிலில் நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், கடல் என்று இருந்தால் அலை அடிக்கத்தான் செய்யும் என்றார்.

உட்கட்சி பிரச்சனைகளை அலுவலகத்திற்குள் தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அவர், அரசியல் நிகழ்ச்சிகளில் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம்தான் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்