தேசிய தலைவர்களை சிரிக்க வைத்த லாலு... ராகுலை பற்றி அப்படி என்ன கூறினார்?

x

ராகுல் காந்தி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அன்பு கட்டளையிட்டுள்ளார்.


பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், ராகுல் காந்தி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும், அவரது திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவதாகவும் கூறினார். இன்னும் நேரம் இருக்கிறது... ராகுல் காந்தி திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து, புன்னகையுடன் பதில் அளித்த ராகுல் காந்தி, இப்பொழுது நீங்கள் கூறி இருக்கிறீர்கள் என்றும், அது நடக்கும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்