"வீடியோ பிடிச்சு என்ன பண்ணப்போற..." பொள்ளாச்சியில் பெண்ணுக்கு நடந்த கொடுமை - தீயாய் பரவும் வீடியோ

x

பொள்ளாச்சி அருகே மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்கிய பெண்ணை, கணவருடன் சேர்ந்து பெண் தாக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. பொள்ளாசி அருகே சீ.மலையாண்டிபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் சீத்தம்மாள். இவர் கணவருடன் ஏற்பட்ட தகராறால் தனது தயாருடன் தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மகளிர் சுய உதவிக்குழுவில் சீத்தாம்மாள் 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த, பணத்தை திருப்ப செலுத்த கோரி துளசி மணி என்பவர் தனது கணவர் மருதமுத்துவுடன் சேர்ந்து சீத்தாம்மாள் மற்றும் அவரது தாயை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோக்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில், சம்பவம் குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்