தீபாவளிக்கு வெளியாகும் தமிழ் படங்கள் என்னென்ன?... களை கட்டும் கோலிவுட் ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட்

x

தீபாவளி ரிலீஸ் ரேஸில் முதலில் பெயரை பதிந்துகொண்டது சிவகார்த்திகேயன் தான். கடந்த ஆண்டு பிரின்ஸ் படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்களுக்கு பதிலடியாக , அயலான் திரைப்படத்தின் மூலம் களம் காண்கிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் என்ற என்டர்டெய்னர், 'இன்று நேற்று நாளை' இயக்குநரின் 2வது படம், இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, இது மட்டுமின்றி ஹாலிவுட்டில் அடிக்கடி பார்க்ககூடிய ஏலியனை தமிழ் சினிமாவில் கொண்டு வர, வருட கணக்காக கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மெனக்கெடும் படக்குழு, என அயலான் படத்தை எதிர்பார்க்க ஏகப்பட்ட காரணங்கள் இருக்கின்றன.

கார்த்திக் சுப்புராஜுக்கு ரசிகர் பட்டாளத்தை அதிகமாக்கிய படம் ஜிகர்தண்டா. அந்த படத்தின் சீக்வெல் என்பது மட்டுமின்றி, நடிப்பு ராட்சசன் என்று ரசிகர்கள் கொண்டாடும் எஸ்.ஜே.சூர்யாவும் , வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டும் லாரன்ஸும் படத்தை எதிர்பார்க்க காரணமாக இருக்கிறார்கள்.இவர்களுடன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தன் பங்கிற்கு ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வர தயாராக இருக்கிறார் என்பது இதுவரை வெளியான 2 வீடியோக்களில் தெரிந்தது.

இந்த ரேஸில் லேட்டஸ்ட் என்ட்ரி கார்த்தியின் ஜப்பான். ஆரம்பத்தில் கார்த்தியின் தீபாவளி ரிலீஸ் படங்கள் மிகப்பெரிய வெற்றியடையவில்லை என்றாலும் , சமீபத்தில் 2019-ல் விஜயின் பிகிலுடன் வெளியான கைதி, 2022ல் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் உடன் வெளியான சர்தார் வெற்றி படங்களாக மாறின.

அந்த வகையில் கிளாஷ்-க்கு பெயர்போன கார்த்தியின் ஜப்பான் தீபாவளிக்கு வெளியாவதை அதிரடியாக அறிவித்துள்ளது படக்குழு. ராஜு முருகன் இயக்கும் இந்த படத்தின் இன்ட்ரோ வீடியோவில் கார்த்தியின் மாறுபட்ட நடிப்பு மற்றும் கெட்டப், ஜி.வி.பிரகாஷின் மாஸான இசைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இந்த தீபாவளி சினிமா ரசிகர்களுக்கு ட்ரிபிள் கொண்டாட்டம் தான்.


Next Story

மேலும் செய்திகள்