நயன் - விக்கி தம்பதி பின்பற்றிய விதிகள் என்ன? விதிமீறல்கள் என்ன? - வெளியான பரபரப்பு அறிக்கை

x

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற சம்பவத்தில் முறையான விதிமுறைகளை அவர்கள் பின்பற்றப்பட்டுள்ளதாகவும், ஆனால் சிகிச்சை பெற்ற மருத்துவமனை உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது..

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும், கடந்த ஜூன் 9ஆம் தேதி, மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 4 மாதங்கள் ஆன நிலையில், கடந்த அக்டோபர் 9ஆம் தேதி, தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக, சமூக வலைத்தளம் மூலம் நட்சத்திர தம்பதி அறிவித்தது.

ஜூன் 9-ல் திருமணம் - அக்டோபர் 9-ல் குழந்தை என்றால் நிச்சயம் வாடகை தாய் தான் என்ற பேச்சும், கூடவே சர்ச்சையும் சுற்றி வந்தது.. ஒருவேளை சட்டவிதிகளை அவர்கள் மீறியிருக்கலாம் என பேசப்பட்ட நிலையில் இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு சென்று விசாரணை நடத்த குழுவையும் அமைத்தது..

3 பேர் கொண்ட குழு கடந்த சில வாரங்களாக விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர்கள் அந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அதில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் 2016ல் திருமணம் செய்ததும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது...

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதும், ஐசிஎம்ஆர் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகை தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அவர்கள் பின்பற்றியதும் உறுதியாகி இருக்கிறது...

நயன்தாரா தம்பதி அமர்த்திய வாடகை தாய்க்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதும் விசாரணையில் வெளிவந்திருக்கிறது... நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் 11.3.2016 அன்றே பதிவு திருமணம் நடந்திருப்பதும், அதற்கான சான்றிதழ் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது...

2020ல் குடும்ப மருத்துவரால் வழங்கப்பட்ட பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ஆகஸ்ட் 2020ல் சினை முட்டை மற்றும் விந்தணு பெறப்பட்டு கருமுட்டைகள் உருவாக்கப்பட்டு உறைநிலையில் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

நவம்பர் 2021ல் வாடகை தாய் ஒப்பந்தமும், மார்ச் 2022ல் கருமுட்டைகள் வாடகைதாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு இந்த குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் அக்டோபரில் பிறந்திருப்பதாவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது...

ஆனால் சினை முட்டை சிகிச்சை தொடர்பாக நோயாளியின் சிகிச்சை பதிவேடுகளை மருத்துவமனை நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை என்றும், விக்னேஷ் சிவன்- நயன்தாராவுக்கு அளித்த சிகிச்சை விபரங்கள், வாடகை தாயின் உடல்நிலை குறித்த ஆவணங்களை மருத்துவமனை பராமரிக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டியிருக்கும் நிலையில்

சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக் கூடாது என்றும் சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது


Next Story

மேலும் செய்திகள்