"பொள்ளாச்சி, கொடநாடு என்னாச்சு...?" - ஆவேசமாய் கேள்வி கேட்ட முதல்வர் ஸ்டாலின்

கொடநாடு விவகாரத்தில் மிகுந்த கவனத்தோடு விசாரணை நடத்தி உண்மை குற்றவாளியை விரைவில் கண்டுபிடிப்போம் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார். அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பொள்ளாச்சி மற்றும் கொடநாடு வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். தவறுகள் நடைபெறுவது இயல்பு என்றபோதிலும், திமுக ஆட்சியில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com