"என்ன ஒரு புத்திசாலித்தனம்.." - மின்சாரம் பாய்வதை தடுக்க செருப்பை மேலே தொங்கவிட்ட மின்துறை

x

நெல்லை மாவட்டம் சிவந்திபுரம் பகுதியில், ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு, மின்கம்பங்கள் மூலம் உயர் அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பகுதியின் நடுவே உள்ள மின்கம்பம் ஒன்றில், காலணி வைத்து கட்டப்பட்டுள்ளது. பொதுவாக மின்கம்பத்தின் அருகே மின்வயர்கள் செல்லும்போது, மின்சாரம் பாயும் அபாயம் ஏற்படுவதை தடுக்க, பிளாஸ்டிக் பைப், மரத்திலான பொருட்களை வைப்பது வழக்கம். ஆனால் வியப்பூட்டும் விதமாக, மின்துறையினர் காலணியை கட்டியுள்ள செயலை, அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்