ரேஷன் கார்டில் நாய்-னு இருந்ததால் ஆவேசம்..நாயாகவே மாறி அதிகாரிகளிடம் கத்திய நபர் - தீயாய் பரவும் வினோத வீடியோ

x

ரேஷன் கார்டில் தன் பெயர் தவறாக குறிப்பிட்டுள்ளதாகவும் அதை மாற்றித் தர வேண்டும் என்றும் கூறி அதிகாரிகளின் வாகனத்தை ஒரு ஆசாமி துரத்திச் சென்று நாய் போலக் குறைத்த சம்பவம், மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

மெற்கு வங்கத்தில் Bankura என்ற பகுதியைச் சேர்ந்த இவரின் பெயர் ஸ்ரீகாந்த் தத்தா. ஆனால், அது இவரின் ரேஷன் கார்டில் ஸ்ரீகாந்த் குத்தா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை திருத்த வேண்டும் என அதிகாரிகளிடம் இவர் 3 முறை விண்ணப்பம் செய்தும் ஸ்ரீகாந்த் குத்தா என்ற பெயர் மாற்றப்படவே இல்லை. அதுவே இந்த ஆவேசத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்தி மொழியில் குத்தா என்பது நாய் என்று பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்