தென் ஆப்பிரிக்காவுடன் 2 வது ஒரு நாள் போட்டி... வெஸ்ட் இண்டீஸ் அணி த்ரில் வெற்றி - பவுமாவின் போராட்டம் வீணானது

x

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. ஃபஃபலோ பார்க்கில் (Buffallo park) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ், கேப்டன் ஷாய் ஹோப்பின் சதத்தால் 8 விக்கெட் இழப்புக்கு 335 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்காவில் கேப்டன் டெம்பா பவுமா சதம் விளாசினார். எனினும் அந்த அணி 42வது ஓவரில் 287 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ், தொடரில் 1க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்