மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி-மருத்துவமனையில் அனுமதி
ஹெலிகாப்டர் குலுங்கியதில் காயமடைந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள சிலிகுரி அருகே உள்ள செவோக் விமான தளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டபோது காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
SSKM மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மம்தா பானர்ஜி, பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். வீட்டில் இருந்து ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்
Next Story
