மோசமான வானிலையால் வெலிங்டன் பயணம் ரத்து - டெல்லி திரும்பிய குடியரசுத் தலைவர் 'திரவுபதி முர்மு'

x

மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, தமிழ்நாடு வந்த குடியரசுத் தலைவர், டெல்லி புறப்பட்டு சென்றார்...

கோவை ஈஷாவில் நடைபெற்ற மகா சிவராத்திரி நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கலந்து கொண்டார். தொடர்ந்து பந்தய சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர், வெல்லிங்டன்னில் உள்ள பாதுகாப்புத்துறை கல்லூரியில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், ஹெலிகாப்டரில் செல்ல வானிலை சாதகமாக இல்லாததால், வெல்லிங்டன் பயண திட்டம் ரத்தானது. இதைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவர், மதியம் 12.30 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். ஆளுநர் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், ஆட்சியர் கிராந்தி குமார் உள்ளிட்டோர், அவரை வழியனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்