ரூ.75,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் - நாட்டிற்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி

x

பிரதமர் நரேந்திர மோடி, இன்று மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

காலை 9.30 மணிக்கு நாக்பூர் ரயில் நிலையம் சென்றடையும் பிரதமர், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

பின்னர் நாக்பூர் மெட்ரோ ரயில் பேஸ் 1-ஐ நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இதே போல் நாக்பூர் நதி மாசு குறைப்புத் திட்டம், மத்திய பெட்ரோ-ரசாயன பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை நாட்டிற்கு அர்ப்பணிப்பது என மொத்தம் 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர், 3.15 மணிக்கு கோவா செல்லும் பிரதமர், 3 தேசிய ஆயுர்வேத நிறுவனங்களை திறந்து வைக்கிறார்.

பின்னர் 5.15 மணிக்கு கோவாவில் 2 ஆயிரத்து 870 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்