விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவி... நடிகருடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த மக்கள்

x

சென்னை பூந்தமல்லி அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வந்த நடிகர் டேனியல் பாலாஜியுடன் அப்பகுதி மக்கள் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சென்னீர்குப்பம் பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பெயர் பலகை திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக நடிகர் டேனியல் பாலாஜி பங்கேற்று விஜய் மக்கள் இயக்கம் கொடியை ஏற்றி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் டேனியல் பாலாஜியுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்