தொழிற்பட்டறையில் சிறிய தீப்பொறியால் நேர்ந்த விபத்து.. கதிகலங்கிய அரியானா

x

அரியானாவில் வெல்டிங் பணியின் போது, ரசாயனத்தை ஏற்றி செல்லும் டேங்கர் லாரி வெடித்ததில் இருவர் உயிரிழந்தனர்.

பானிபட் பகுதியில் டேங்கர் லாரியை வெல்டிங் செய்யும் பணி நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது நெருப்புப்பொறி பட்டத்தில் லாரியில் இருந்த ரசாயனப்பொருளில் தீ விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறியது.

அதில் சம்பவ இடத்தில் இருந்த இருவர் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேங்கர் லாரி வெடித்ததில் அப்பகுதியில் இருந்த கடையும் தீப்பற்றி எரிந்தது.


Next Story

மேலும் செய்திகள்