களைகட்டும் தசரா திருவிழா!; பாரம்பரிய உடை அணிந்து நடனம் - உற்சாகத்தில் மக்கள்

x

திருச்செந்தூர் குலசேகரபட்டினம் தசரா திருவிழாவில், பாரம்பரிய உடையில் நடனக் குழுவினர் நடனமாடினர்.

குலசேகரபட்டினம் தசரா திருவிழா, கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, திருச்செந்தூர், அதன் சுற்றிப்புற பகுதிகளில் பல்வேறு தசரா குழுவினர் மேள, தாளம் முழங்க காணிக்கை பிரித்து வருகின்றனர். அப்போது, பல்வேறு வேடம் அணிந்த தசரா குழுவினர், நடனக் குழுவினருடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தனர். மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்துள்ள நடனக் குழுவினர், பாரம்பரிய முறையில் ஆடை அணிந்து நடனமாடியது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்