"என்னது Dress இவ்ளோதான் ரேட்டா?".. மணப்பெண் கல்யாணத்தை நிறுத்தியதால் அப்செட்டில் மாப்பிள்ளை வீட்டார்

x

உத்தரகாண்டில் விலை உயர்ந்த லெஹங்கா உடை வாங்கவில்லை என்பதால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஹல்த்வானி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், மணமகன் தரப்பு கொண்டு வந்த லெஹெங்காவின் விலை 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்பதால் ஆத்திரமடைந்து, திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். இதனையடுத்து மணமகனின் தந்தை, அந்த பெண்ணுக்கு விருப்பமான லெஹங்காவை வாங்க ஏடிஎம் கார்டை தர முன்வந்துள்ளார். ஆனால் அதனை மணப்பெண் ஏற்காத நிலையில், இந்த விவகாரம் போலீசாரிடம் சென்றது. அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையிலும் சுமூக முடிவு ஏற்படாததால், திருமணம் ரத்தானது.


Next Story

மேலும் செய்திகள்