எதிர்பாரா சர்ப்ரைஸ் கொடுத்த வானிலை - புயல் அடித்தது போல் மாறிய சென்னை

x

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. பெரும் சூறைக்காற்றுடன் பெய்த இந்த கனமழையால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. பெருங்களத்தூரில் மின்சார கம்பிகளில் மரங்கள் முறிந்து விழுந்தால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக மின் வினியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதே போல், புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாக்காக காத்திருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வாயில் அருகே அதிக அளவு மழை நீர் தேங்கி நின்றதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது..


Next Story

மேலும் செய்திகள்