"எடப்பாடி பழனிசாமியின் முயற்சியால் தங்க கவசம் அணிவிப்பு" - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

x

மருது சகோதரர்களின் 221-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, துரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த சிவரக்கோட்டையில் உள்ள அவர்களின் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், மக்களின் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சிவரக்கோட்டையில் மருது பாண்டியர்களுக்கு சிலை அமைக்க அரசாணை பிறப்பித்தார் என்றார். எடப்பாடி பழனிசாமியின் முயற்சியால், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்