"நாம் முடிவுரை எழுதுவோம்" - சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி சூளுரை

x

"நாம் முடிவுரை எழுதுவோம்" - சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி சூளுரை


ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்து உள்ளார்.

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னர், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், 140 கோடி மக்களை ஒன்றிணைத்து 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்த நாள், வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்றும்,

தேசத்தின் மூலை முடுக்கெங்கும் மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.

விடுதலைக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதற்கான சந்தர்ப்பம் இது என நெகிழ்ச்சி தெரிவித்த மோடி,...

ராணி சென்னம்மா, ராணி வேலு நாச்சியார் போன்றோர் நாட்டின் பெண் சக்தியின் அடையாளம் என்றும் கூறினார்.

சுப்பிரமணிய பாரதியார், சர்தார் வல்லபாய் பட்டேல், மங்கள் பாண்டே, சந்திரசேகர் ஆசாத், பகத்சிங் உள்ளிட்டோருக்கு வணக்கம் செலுத்த வேண்டிய தருணம் இது என்றும்,...

இந்த தருணத்தில் பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர்களையும் நாம் கவுரவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன் பயணித்தாலும் மிகப் பெரும் வெற்றிகளை மக்கள் படைத்து இருப்பதாகவும்,...

ஜனநாயகத்தின் பிறப்பிடம் இந்தியா என்பதை இந்த உலகம் அறிந்திருக்கவில்லை என்றும், இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

புதிய தீர்மானத்துடன் புதிய திசையில் அடியெடுத்து வைக்க வேண்டிய நாள் இன்று என்றும் பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்